இந்தியா

மகாராஷ்டிரா: நிச்சயம் செய்தபின் பிடிக்காமல் போன மாப்பிள்ளை- கூலிப்படை உதவியுடன் தீர்த்துக்கட்ட முயன்ற பெண்

Published On 2025-04-03 20:53 IST   |   Update On 2025-04-03 20:53:00 IST
  • நிச்சயதார்த்தம் முடிந்த பின் மாப்பிள்ளை பிடிக்கவில்லை.
  • கூலிப்படைக்கு 1.5 லட்சம் ரூபாய் கொடுத்து மாப்பிள்ளையை தீர்த்துக்கட்ட கட்டளை.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நிச்சயம் செய்த பிறகு மாப்பி்ள்ளை பிடிக்காததால், பெண் ஒருவர் ஐந்து பேருக்கு 1.5 லட்சம் கொடுத்து கொலை செய்ய சொன்ன சம்பவம் நடந்துள்ளது.

புனே மாவட்டம் கர்ஜாட் தாலுகா மகி ஜல்கான் பகுதியைச் சேர்ந்தவர் சாகர் ஜெய்சிங் கடம். இவருக்கும் 28 வயதான மயூரி சுனில் டாங்டே என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஜெய்சிங் கடாம் ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார்.

நிச்சயம் செய்யப்பட்ட பிறகு மயூரிக்கு ஜெய்சிங் கடாமை பிடிக்கவில்லை. இதனால் ஜெய்சிங் கடாமை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கான ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஐந்து பேரை தயார் செய்துள்ளார். அந்த ஐந்து பேரும் ஜெய்சிங் கடாமை கொலை செய்ய ஒப்புக் கொண்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி புனே-சோலாபூர நெடுஞ்சாலை டவுண்ட் அருகே ஜெய்சிங் கடாம் சென்றபோது, மர்ம மனிதர்கள் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவில் ஆதித்யா சங்கர், சந்தீப் கவடா, சிவாஜி ராம்தாஸ் ஜாரே, சுராஜ் திகாம்பர் ஜாதவ், இந்திரபன் சகாராம் கோல்பே ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், மயூரிதான் கொலை செய்ய விசயம் போலீசாருக்கு தெரியவந்தது.

உடனோ போலீசார் மயூரை கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News