இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-23 06:59 IST   |   Update On 2024-11-23 21:49:00 IST
2024-11-23 09:37 GMT

கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இதில், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.

ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.

சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்தார்.

2024-11-23 09:34 GMT

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

2024-11-23 08:45 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 225 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 55 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 56 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2024-11-23 07:42 GMT

மகாராஷ்டிராவில் பாபா சித்திக் மகன் ஜீஷன் சித்திக் வந்த்ரே கிழக்கு தொகுதியில் 5958 வாக்குகள் பின்தங்கியுள்ளார்

2024-11-23 07:31 GMT

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் 7634 வாக்குகள் பின்தங்குகிறார்.

2024-11-23 07:30 GMT

மகாராஷ்டிராவில் முதல்வர் ரேஸ் தொடங்கியுள்ளது. பா.ஜ.க.வினர் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அஜித் பவாரின் மனைவி தனது கணவர்தான் முதல்வர் எனத் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே மகன், தனது தந்தைதான் மீண்டும் முதல்வராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

2024-11-23 07:05 GMT

வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே 1715 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

2024-11-23 07:03 GMT

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் வீட்டு முன் ஆட்டம் போடும் அக்கட்சி தொண்டர்கள்.

2024-11-23 07:01 GMT

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 220 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 54 இடங்களில் முன்னிலை.

ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2024-11-23 07:00 GMT

வெற்றிக் கொண்டாட்டத்தில் இனிப்பு பரிமாறிய சிவசேனா தலைவர்கள். மற்ற தலைவர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே இனிப்பு ஊட்டிவிட்டார்.

Tags:    

Similar News