வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
- ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி குறித்து பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது அவர் "எதிர்மறை அரசியலும், குடும்ப அரசியலும் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வளர்ச்சி, நல்லாட்சி, உண்மை சமூக நீதி வென்றது. பொய்கள் மற்றும் வஞ்சகம், மோசமாக தோல்வியை தழுவியுள்ளது" என்றார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு, இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.
மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- 34, காங்கிரஸ்- 16, ராஷ்டிரிய ஜனதா தளம்- 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமாக 56 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது, தேர்தல் முடிவுகளை விரிவாக ஆராய்வோம்- ராகுல் காந்தி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர்," அனைத்து தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ள ஹேமந்த் சோரன், இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துகள்" என்றார்.
வயநாடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியதற்கு நன்றி- பிரதமர் மோடி
மகாராஷ்டிரா மாநில வெற்றியை தொடர்ந்து அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பேட்டி அளித்தார். அப்போது அவர், "வெற்றியால் நாங்கள் சளைக்க மாட்டோம். ஆனால், இது நிச்சயமாக எங்கள் பொறுப்பை அதிகரித்துள்ளது" என்றார்.
பாராளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்- பிரியங்கா காந்தி
மும்பையில் தொடர்ந்து 3வது முறையாக தமிழரான கேப்டன் தமிழ்ச் செல்வன் வெற்றி பெற்றார். சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக 7 இடங்களிலும், 2 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் முன்னிலையில் உள்ளது.