வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
மகாயுதி கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என முன்னதாகவே கூறுியிருந்தேன். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் பதவி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா 1685 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 222 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 53 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் 34118 வாக்குகள் முன்னிலை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே பெற்றிருந்த நிலையில் தற்போது ஆச்சர்யம் அளிக்கம் வகையில் முன்னிலை பெற்றுள்ளது.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் 18,311 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே 597 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 49 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா மும்பாதேவி தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ஷைனா என்.சி. 7716 வாக்குகள் பின்தங்கியுள்ளார். இவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு முந்தைய தினம் பா.ஜ.கவில் இருந்து சிவசேனா கட்சிக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி மெஜாரிட்டி எண்ணிக்கையை தாண்டி முன்னிலை வகிப்பதால் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்க பா.ஜ.க. அலுவலத்திற்கு வந்த ஸ்வீட் பார்சல்கள்.