இந்தியா

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு

Published On 2025-07-22 17:44 IST   |   Update On 2025-07-22 17:47:00 IST
  • 2006-ல் மின்சார ரெயில்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர்.
  • குற்றவாளிகள் 12 பேரையும் சிறப்பு கோர்ட் சமீபத்தில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மும்பை:

மும்பை ரெயில் தொடர் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் என அனைவரையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

மும்பை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறியதாவது:

12 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும் முன் தீர்ப்பை மாநில அரசு ஆய்வு செய்யும்.

அதற்கு முன் தீர்ப்பின் தன்மை, விடுதலைக்கான காரணம் குறித்து நாங்கள் ஆலோசிப்போம்.

முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் இந்த விவகாரத்தை ஆய்வு செய்வார். ஆய்வுக்கு பிறகுதான் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யும். மாநில அரசிடம் கூடுதல் தகவல்கள் இருந்தால் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதை விரிவாகக் கூறுவார் என தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பை ரெயில் குண்டு வெடிப்பில் சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு வரும் 24-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Tags:    

Similar News