இந்தியா

அனைத்து மாநிலங்களும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டமன்றக் குழுவை அமைக்க வேண்டும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

Published On 2025-09-15 17:18 IST   |   Update On 2025-09-15 17:18:00 IST
  • 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன.
  • வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பெண்கள் அதிகாரமளித்தல் குழுக்களின் இரண்டு நாள் மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ஓம் பிர்லா பேசியதாவது:-

நான் விரைவில் மாநில சட்டசபை சபாநாயர்களுக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாடு கமிட்டியை அமைக்க வலியுறுத்தி கடிதம் எழுதுவேன். 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்கள், பெண்கள் பிரச்சினைகள் குறித்த பரிந்துரைகளை அந்தந்த சட்டமன்றங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்க இதுபோன்ற குழுக்களை அமைப்பது அவசியம்.

லக்னோவில் நடைபெறவிருக்கும் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்போம். வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார அதிகாரமளிப்பதில் பெண்கள் ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு ஆப்சன் அல்ல. அது அவசியம். இது பெண்களை பயனாளிகளாக மட்டுமல்லாமல், வளர்ச்சி செயல்முறையின் இயக்கிகள், படைப்பாளிகள் மற்றும் தலைவர்களாகவும் நிலைநிறுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.

இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News