இந்தியா

இந்தியாவில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்.. இந்த 4 மாநிலங்களில் மட்டுமே பாதி வழக்குகள் பதிவு

Published On 2025-06-18 04:15 IST   |   Update On 2025-06-18 04:15:00 IST
  • 2021 இல் பஞ்சாப் மற்றும் டெல்லியில் அதிகபட்சமாக 22% ஆகவும் குறைந்த எடை பிறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.
  • எடை பார்க்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 1993 இல் 16% (7,992) இலிருந்து 2021 இல் 90% (209,266) ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.

இருப்பினும் தற்போது குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில் பாதி வழக்குகள் உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மற்றும் மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் பதிவாகின்றன என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ஆய்வு காட்டுகிறது.

தற்போது, குளோபல் ஹெல்த், பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, 1993 இல் 26% ஆக இருந்த குறைந்த எடை குழந்தை பிறப்பு விகிதம், 2021 இல் 18% ஆகக் குறைந்துள்ளது.

மாநில வாரியாக, 1993-99ல் 25% ஆக இருந்த சராசரி, 2006ல் 20% ஆகவும், 2021ல் 16% ஆகவும் குறைந்துள்ளது.

2019-21 ஆம் ஆண்டில் குறைந்த எடையுடன் பிறந்த 42 லட்சம் குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி (47%) மேற்கண்ட நான்கு மாநிலங்களில் பிறந்துள்ளன.

1993 இல் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 48% ஆகவும், 2021 இல் பஞ்சாப் மற்றும் டெல்லியில் அதிகபட்சமாக 22% ஆகவும் குறைந்த எடை பிறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.

மேலும் பிறக்கும் போது எடை பார்க்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 1993 இல் 16% (7,992) இலிருந்து 2021 இல் 90% (209,266) ஆக அதிகரித்துள்ளது.

முறையான கல்வி இல்லாத, ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு குறைந்த எடையுடனும், சராசரி அளவை விட சிறியதாகவும் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.  

Tags:    

Similar News