இந்தியா
தேசிய பூங்காவில் Safari வாகனத்தை துரத்திச் சென்று சிறுவனை தாக்கிய சிறுத்தை - திடுக் வீடியோ
- பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
- ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இங்கு சஃபாரி பயணம் சென்றிருந்தபோது, சிறுத்தை தாக்கியதில் 13 வயது சிறுவன் காயமடைந்தான்.
நேற்று மதியம் காட்டு வழியாக ஜீப் சஃபாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த ஒரு சிறுத்தை திடீரென சஃபாரி ஜீப்பை நோக்கி ஓடியது.
பின்னர் அது ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்று, அப்போது கதவருகே அமர்ந்திருந்த 13 வயது சிறுவன் கையில் சிறுத்தையின் நகங்கள் பட்டு காயம் ஏற்பட்டது.
இதன்பின் அந்த ஜீப் ஓட்டுநர் வாகனத்தை விரைவாக செலுத்தி அங்கிருந்து பயணிகளை பத்திரமாக அழைத்துச் சென்றார். இதன்பின் சிறுவனுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, ஜன்னல்களில் வலைகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர காண்ட்ரே தெரிவித்தார்.