இந்தியா

லல்லு உதவியாளரின் ரூ.57 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Published On 2024-10-23 12:52 IST   |   Update On 2024-10-23 12:52:00 IST
  • தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.
  • இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.

முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர் அமித் கத்யாலின் ரூ.57 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இவர் பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார்.

லல்லு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரெயில்வே நிலம் தொடர்பான வழக்கில் கத்யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளிநாடுகளில் ரூ.200 கோடிக்கு மேல் முதலீடு செய்தது தெரியவந்தது.

குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரீஸ் ரியல் டெக் நிறுவனம் மற்றும் கத்யால், அவரது குடும்ப உறுப்பினர்கள் என இதுவரை ரூ.170 கோடி சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News