இந்தியா
விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் - ரெய்னா வலியுறுத்தல்
- விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்
- 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 36 வயதான விராட் கோலி, தனது 14 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுகட்டி ஓய்வை அறிவித்தார்.
123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9230 ரன்கள் குவித்து 30 சதங்களை அடித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளை அதிக ரசிகர்கள் பார்க்கக் காரணமாக இருந்தவர் விராட் கோலி எனப் பலரும் தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி செய்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்திய அரசு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரெய்னா கோரிக்கை விடுத்துள்ளார்.