இந்தியா

ஆந்திராவில் தனியார் ஆஸ்பத்திரியில் கிட்னி விற்பனை

Published On 2023-04-28 10:54 GMT   |   Update On 2023-04-28 10:55 GMT
  • அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது.
  • சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சமீப காலமாக கிட்னி விற்பனை அதிகளவில் நடந்துள்ளது.

புரோக்கர்கள் மூலம் ஆசைவார்த்தை கூறி ஏழைகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு அழைத்து வரும் புரோக்கர்களுக்கு ரூ.1 முதல் 2 லட்சம் வரை கமிஷனாக தரப்பட்டுள்ளது. புரோக்கர்களை நம்பி காமராஜர் என்பவர் தனது கிட்னியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொடுத்துள்ளார். சிறுநீரகம் கொடுத்ததற்காக அவரிடம் பேசியபடி தனியார் ஆஸ்பத்திரி குறிப்பிட்ட தொகையை தரவில்லை.

இதையடுத்து அவர் விசாகப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆஸ் பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு அனுமதி இல்லாமல் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News