சபரிமலையில் நடிகர் திலீப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. தரிசனம் கிடைத்தது எப்படி?- கேரள ஐகோர்ட் கேள்வி
- சபரிமலையில் அனைத்து பக்தர்களும் சமம் என்ற நிலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
- இச்சம்பவம் குறித்து நேற்று கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் அனைத்து பக்தர்களும் சமம் என்ற நிலையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி இல்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சபரிமலை சென்ற நடிகர் திலீப் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் இரவு நடை அடைக்கும்போது பாடப்படும் அரிவராசனம் முடியும் வரை நடிகர் திலீப் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து நேற்று கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் திலீப் சன்னிதானத்திற்கு வந்தது எப்படி? என கேள்வி எழுப்பிய சிறப்பு அமர்வு நீதிபதிகள், அரிவராசனம் பாடல் முடியும் வரை நடிகர் திலீப்பிற்கு சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினர்.
இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து சம்பவம் குறித்து தேவஸ்தான ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு இருப்பதாக தேவஸ்தானம் சார்பில் கோா்ட்டில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.