இந்தியா

சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்- கேரள ஐகோர்ட்

Published On 2022-12-13 15:57 IST   |   Update On 2022-12-13 15:57:00 IST
  • சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களும் கோவிலில் தரிசனம் செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் செல்லும் நிலை ஏற்படக்கூடாது.

திருவனந்தபுரம்:

சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேரள ஐகோர்ட்டு தேவசம்போர்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.

அப்போது சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களும் கோவிலில் தரிசனம் செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் செல்லும் நிலை ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது.

Tags:    

Similar News