இந்தியா

இறந்த ஊழியரை சார்ந்தவரை புறக்கணித்தால் அரசு ஊழியரின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்- பினராயி விஜயன்

Published On 2023-07-13 04:39 GMT   |   Update On 2023-07-13 06:07 GMT
  • முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
  • குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இறப்பின் கீழ் வேலை பெற்ற அரசு ஊழியர்கள், இறந்த ஊழியரை சார்ந்த பிறரை புறக்கணித்தால், அவரது சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர். மேலும் அவர்களது தேவைகளான உணவு, சொத்து, தங்குமிடம், சிகிச்சை பராமரிப்பு உள்ளிட்டவைகளை கவனிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதுபோல் கவனிக்காமல் இருக்கும் அரசு ஊழியர் மீது எழுத்துப்பூர்வமான புகாரை நியமன அதிகாரியிடம் பதிவு செய்யலாம்.

அரசு முடிவின்படி அத்தகைய ஊழியர்கள் மீது பெறப்படும் புகார் உண்மை யென நிரூபிக்கப்பட்டால், அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் அவர்களைச் சார்ந்தவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News