இந்தியா

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை- மத்திய அரசிடம் சமர்ப்பித்த அமர்நாத் ராமகிருஷ்ணா

Published On 2023-01-30 14:38 GMT   |   Update On 2023-01-30 14:38 GMT
  • 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
  • 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளின் கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஆய்வு நடத்தினர்.

புதுடெல்லி:

வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கீழடி கிராமத்தில் அகழாய்வு பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.

இங்கு 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும், சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளின் கீழடியில் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஆய்வு நடத்தினர். அதில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகள்படி கீழடி ஆய்வு அறிக்கையை தயார் செய்தனர்.

இந்த அறிக்கையை டெல்லியில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைமையகத்தில் தலைமை இயக்குனரிடம் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்தார்.

Tags:    

Similar News