இந்தியா
null

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை- பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2025-09-08 11:58 IST   |   Update On 2025-09-08 11:58:00 IST
  • இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
  • ஒரு அதிகாரி உள்பட 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவு துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசார், மத்திய ரிசர்வ் படை ஆகியவை இணைந்து இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.

அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் குண்டு பாய்ந்து பலியானான்.

அவனது பெயர் என்ன? எந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்ற விவரம் தெரியவில்லை. ஒரு அதிகாரி உள்பட 3 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News