இந்தியா

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது - காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகா மீண்டும் திட்டவட்டம்

Published On 2023-08-29 16:42 IST   |   Update On 2023-08-29 16:42:00 IST
  • கர்நாடக அரசு இந்த முறையும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது.
  • கர்நாடக அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது.

புதுடெல்லி:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது ஆணையத்தின் 23-வது கூட்டம் ஆகும். ஒரே மாதத்தில் ஆணைய கூட்டம் இருமுறை நடப்பது குறிப்பிடத்தக்கது.

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், வழக்கம்போல் இந்த முறையும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது.

அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என கர்நாடக அரசு கூறியுள்ளது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

Tags:    

Similar News