இந்தியா

ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடி சர்ச்சை எழுந்ததால் மன்னிப்பு கோரிய டி.கே.சிவக்குமார்

Published On 2025-08-27 04:08 IST   |   Update On 2025-08-27 04:08:00 IST
  • கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஆர்எஸ்எஸ் பாடலை பாடினார்.
  • இது சர்ச்சை ஆன நிலையில் துணை முதல் மந்திரி மன்னிப்புக் கோரினார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நடந்த கூட்டத்தொடரின்போது ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வினரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதம் எனப்படும் 'நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே....' என தொடங்கும் வரிகளைப் பாடினார். டிகே சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடியது கர்நாடக அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சில தினங்களுக்கு முன் பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலின் மூன்று வாக்கியத்தை பாடி இருந்தேன். அதன்மூலம் ஐ.பி.எல். போட்டி தொடர்பான பிரச்சனை சார்ந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோகாவை பங்கேற்க செய்ய முயற்சித்தேன்.

ஏனெனில், எனது நண்பர்கள் சிலர் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர்.

நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக பிறந்தேன். அப்படியே தான் உயிர் பிரிவேன். காந்தி குடும்பத்தை யாரேனும் கேள்வி கேட்பதை அனுமதிக்க முடியாது. எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்கள் சிலர் இது தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News