இந்தியா

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் காயம்

Published On 2025-07-20 07:01 IST   |   Update On 2025-07-20 07:01:00 IST
  • ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார் .
  • எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கான்வாய் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பணியாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

நேற்று (சனிக்கிழமை) மாலை மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியில் உள்ள விரைவுச் சாலையில் கவுடஹள்ளி அருகே இந்த விபத்து நடந்தது.

சிவகுமார் பயணித்த காருக்கு பின்னல் வந்த எஸ்கார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்தவர்கள் மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு டி.கே. சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், கான்வாய் விபத்துக்குப் பிறகு டி.கே. சிவகுமார் பெங்களூருக்குத் திரும்பினார்.  

Tags:    

Similar News