இந்தியா

கர்நாடகாவில் ஜெயின் துறவி கொலை: சிபிஐ விசாரணை கேட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் போராட்டம்

Published On 2023-07-12 10:55 IST   |   Update On 2023-07-12 10:55:00 IST
  • ஜெயின் துறவி கடந்த 5-ந்தேதி காணாமல் போன நிலையில் பிணமாக மீட்பு
  • கொடுத்த கடனை திருப்பி கேட்ட விவகாரத்தில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது

கர்நாடகாவின் சிக்கோடி தாலுகாவில் உள்ள ஹிரேகோடி கிராமத்தில் உள்ள நந்த் பர்வத் மடம் எனும் சமண மடத்தில், ஆச்சார்யா கம்குமார் நந்த் மகாராஜ் எனும் ஜெயின் துறவி ஒருவர் 15 வருடங்களாக தங்கியிருந்தார். திடீரென அவர் காணாமல் போனதாக காவல்துறையிடம் மடத்தின் மேலாளர் பீமப்பா உகாரே புகாரளித்தார்.

காவல்துறை விசாரணையில் அந்த துறவி, கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அவரது சடலம் ராய்பாக் தாலுகாவில் உள்ள கடக்பாவி கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஜூலை 5-ம் தேதி காணாமல் போன அவர் 8-ந்தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் துறவி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறத்தி கர்நாடக மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.-க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News