சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் சூர்யகாந்த்
- சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்க உள்ளார்.
- அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர்.கவாயின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்கிறார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் விழாவில் புதிய தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
இந்த விழாவில்பிரேசில், பூடான், கென்யா, மலேசியா, நேபாளம், இலங்கை, மொரிஷியஸ் நாடுகளை சேர்ந்த தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நீதிபதி சூர்யகாந்த் பேசுகையில், நவம்பர் 24-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளேன். எனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.