இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: இந்தியா பதிலடி- 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2023-10-27 02:33 GMT   |   Update On 2023-10-27 02:33 GMT
  • எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்
  • இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில், நேற்றிரவு திடீரென பாகிஸ்தான் வீரர்கள் (Pakistan Rangers) துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.

நேற்றிரவு 8 மணியில் இருந்து நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குள்ளே இருந்தனர். இருந்தபோதிலும் எல்லை பாதுகாப்புப்படை வீரர் ஒருவர், நான்கு பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தான் வீரர்கள் அரினியா, ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள ஐந்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் குப்வாரா மாவட்டம் மச்சில செக்டாரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

இதற்கிடையே எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஐந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி, உடுருவல் திட்டத்தை முறியடித்தனர்.

சுமார் இரண்டு மூன்று வருடத்திற்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், நேற்றிரவு 8 மணியில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக எல்லையோர மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News