இந்தியா

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

Update: 2022-11-26 15:55 GMT
  • மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
  • மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் உள்பட பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாட்டில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர், முதல் மந்திரி அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

இந்த தருணத்தை நாடு முழுவதும் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இதை நாங்கள் கடுமையாக உணர்கிறோம். நீதியின் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த தாக்குதலை திட்டமிட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றி வருகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News