இந்தியா

ஜெயிலில் முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்: உ.பி.யில் 144 தடை உத்தரவு

Published On 2024-03-29 01:22 GMT   |   Update On 2024-03-29 01:22 GMT
  • ஐந்து முறை முக்தார் அன்சாரி எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார்.
  • 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டர்-ஆக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் முக்தர் அன்சாரி. இவர் பண்டா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 63 வயதான முக்தார் அன்சாரி மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாரடைப்பால் முக்தார் அன்சாரி உயிர் பிரிந்ததாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது சகோதரும் காசிப்பூர் தொகுதி எம்.பி.யுமான அப்சல் அன்சாரி, முக்தார் அன்சாரி ஜெயிலில் மெதுவாக கொல்லும் விசம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.

ஐந்து முறை முக்தாரி அன்சார் எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். ஐந்து முறையும் மவு சதார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005-ல் இருந்து உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவரது மறைவையொட்டி பண்டா, மவு, காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022-ல் இருந்து உத்தர பிரதேசத்தின் பல்வேறு நீதிமன்றங்களால் 8 வழங்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட 66 பேர் கொண்ட கேங்ஸ்டர் பட்டியலில் இவரது பெயரும் அடங்கும்.

ஜெயிலில் அவர் வாந்தி எடுத்த நிலையில் மயங்கிய நிலைக்கு சென்றார். 9 டாக்டர்கள் கொண்ட குழு அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவு-வை சொந்த இடமாக கொண்ட முக்தார் அன்சாரிக்கு காசிப்பூர், வாரணாசி மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News