50 சதவீதம் வரிவிதித்த அமெரிக்காவின் முடிவு துரதிருஷ்டவசமானது: இந்திய வெளியுறவுத்துறை
- இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
- இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அத்துடன் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.
இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதலாக வரி விதிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் இந்திய பொருள்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதம் வரி நியாயமற்றது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேச நலனைக் காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.