இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய தீவிரம்- ஆந்திராவில் பரபரப்பு

Published On 2023-09-27 04:17 GMT   |   Update On 2023-09-27 04:18 GMT
  • சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
  • தனது தந்தை மீது ஆந்திரா அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அமராவதி தலைநகரில் உள் வட்ட சாலை அமைத்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பெயரை முதல் குற்றவாளியாக சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.

ஏ.சி.பி. நீதிமன்றத்தில் லோகேஷ் பெயரை குறிப்பிட்டு சி.ஐ.டி. மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் நாராயணா மற்றும் சிலர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த வழக்கு காரணமாக அடுத்ததாக நாரா லோகேஷை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லியில் நாரா லோகேஷ் நேற்று சந்தித்தார். தனது தந்தை மீது ஆந்திரா அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக புகார் தெரிவித்தார்.

Tags:    

Similar News