இந்தியா

உயிருக்கு பயந்து சிசிடிவி கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ வைரல்

Published On 2025-07-15 10:39 IST   |   Update On 2025-07-15 10:39:00 IST
  • சதீஷ் சவுகான் என்பவருக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
  • நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சதீஷ் சவுகான் என்பவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சொத்து தகராறால் உயிருக்கு பயந்து, கேமரா பொருத்திய ஹெல்மெட் உடன் பயணிக்கும் நபரின் வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் அவரை ஹெல்மெட் மேன் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

பக்கத்து வீட்டுக்காரரருடன் ஏற்பட்ட தகராறில் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர் என்று சதீஷ் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கேமரா பொருந்திய ஹெல்மெட் உடன் அவர் பயணித்து வருகிறார்.

இது தொடர்பாக பேசிய சதீஷ், "எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதாவது நடந்தால், குறைந்தபட்சம் வீடியோ ஆதாரமாவது இருக்கும்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய போலீசார், "நாங்கள் 2 தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சித்தோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது" என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News