இந்தியா

IADWS: உள்நாட்டில் தயாரான பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி!

Published On 2025-08-24 19:23 IST   |   Update On 2025-08-24 19:23:00 IST
  • IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும்
  • இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிசா கடற்கரையில் அதன் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் வெற்றிகரமான சோதனையை நடத்தியது.

IADWS என்பது மூன்று நவீன ஆயுதங்களைக் கொண்ட ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு முற்றிலும் உள்நாட்ட்டில் உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு வெவ்வேறு உயரங்களிலும் தூரங்களிலும் எதிரிகளின் வான் தாக்குதல்களை இடைமறிக்கும். சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்பட்டன.

இந்த சோதனை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் சோதனை தளத்தில் நடந்தது. இதை மூத்த டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது தனது எக்ஸ் பக்கத்தில், "IADWS இன் வெற்றிகு DRDO, இந்திய ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறையை நான் வாழ்த்துகிறேன்" தெரிவித்தார்.   

Tags:    

Similar News