இந்தியா

தொடர் தாக்குதல் - அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார்

Published On 2025-05-09 10:16 IST   |   Update On 2025-05-09 10:16:00 IST
  • எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
  • துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

மேலும், மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய கடற்படை அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார்நிலையில் உள்ளது.

அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News