இந்தியா

56 வயது ராணுவ அதிகாரியின் அசத்தலான உடற்பயிற்சி வீடியோ

Published On 2024-07-01 14:42 IST   |   Update On 2024-07-01 14:42:00 IST
  • வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் மேஜர் ஜெனரலை பிட்னசை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
  • ‘மேஜர் ஜெனரல் பிரசன்ன ஜோஷி... 56 வயதில் என்ன ஒரு பிட்னஸ்!’ என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

உடலை கட்டுமஸ்தாக ஆக்குவதற்காக இளைஞர்கள் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகளை சமூக வலைதளங்களில் அதிகமாக காண முடியும். ஆனால் கடினமான உடற்பயிற்சி ஒன்றை 56 வயதான ராணுவ அதிகாரி ஒருவர் அசத்தலாக செய்யும் வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் வெளியாகி பயனர்களை கவர்ந்துள்ளது.

இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் பிரசன்னா ஜோஷி என்ற அந்த ராணுவ அதிகாரிக்கு 56 வயதாகிறது. அவர் தனது சீருடை அணிந்து உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள புல்-அப் நிலையத்திற்கு நடந்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. பின்னர் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 25 முறை அவர் புல்-அப் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது. அப்போது ஜிம்மில் இருந்த இளம் ராணுவ வீரர்கள் மேஜர் ஜெனரலை வெகுவாக பாராட்டுகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் மேஜர் ஜெனரலை பிட்னசை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். 'மேஜர் ஜெனரல் பிரசன்ன ஜோஷி... 56 வயதில் என்ன ஒரு பிட்னஸ்!' என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பிறகு நானும் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என உத்வேகம் அடைந்தேன். உலகில் தலை சிறந்த போர் அமைப்பில் இந்திய ராணுவம் மதிப்பிடப்படுவதற்கு இதுபோன்ற அதிகாரிகளே காரணம். நான் வெட்கப்பட்டு இப்போது ஜிம்முக்கு செல்கிறேன் என விமானப்படை வீரர் வினோத் குமார் கூறியுள்ளார்.


Tags:    

Similar News