இந்தியா
null

பாகிஸ்தான் ஏவிய தற்கொலை ட்ரோன்கள் இடைமறித்து அழித்த இந்திய ராணுவம்

Published On 2025-05-10 12:59 IST   |   Update On 2025-05-10 13:04:00 IST
  • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
  • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை நோக்கி தற்கொலை ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லை பகுதிகளை தாக்கி வருகிறது. இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

நேற்று உச்சகட்டமாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வானிலேயே அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை நோக்கி தற்கொலை ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது.

பாகிஸ்தான் ஏவிய தற்கொலை ட்ரோன்களை இந்திய வான்படை வீரர்கள் இடைமறித்து அழித்தனர்.

இதே போல் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன்கள் மூலமாக பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.

ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News