இந்தியா

ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: ஸ்ரீநகர் மாவட்டத்தில் மிகவும் குறைவான வாக்குப்பதிவு

Published On 2024-09-26 06:56 IST   |   Update On 2024-09-26 06:56:00 IST
  • ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதிகளில் 28.84 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • இதில் ஹப்பாகடல் தொகுதியில் 16.92 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் நேற்று ஆறு மாவட்டங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தோராயமாக 57.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் அதிகாரி பி.கே. போலே தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ரீநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருந்தது. தற்போது ஆது 57 சதவீதமாக குறைந்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கந்தர்பால், புட்காம், ஸ்ரீநகரில் 45.39 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள. ஜம்மு, ரியாசி, ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் 73.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கந்தர்பாலில் இரண்டு தொகுதிகளில் 62.85 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியில் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். புட்காமில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் 63.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஸ்ரீநகரில் உள்ள 8 தொகுதிகளில் 28.84 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதில் ஹப்பாகடல் தொகுதியில் 16.92 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

ஹஸ்ரத்பால் தொகுதியில் 30.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014 தேர்தலில் 29.54 சதவீத வாக்குகள் பதிவாகின. 2008-ல் 28.89 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

கன்யார் தொகுதியில் 25.93 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது 2014-ல் 26.16 சதவீதமும், 2008-ல் 17.41 சதவீதமும் பதிவாகியிருந்தது.

உமர் அப்துல்லா போட்டியிட்ட தொகுதியில் (கந்தர்பால்) 57.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. 2014-ல் 58.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. 2008-ல் 51.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மற்றொரு தொகுதியான புட்காமில் வாக்கு சதவீதம் 51.15 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் 66.35 சதவீதமாக இருந்தது.

ஜம்மு காஷ்மீரில் மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இருந்த போதிலும் 2014 தேர்தலை விட குறைவுதான்.

ரியாசியில் 74.71 சதவீதம், பூஞ்ச் மாவட்டத்தில் 73.79 சதவீதம், ரஜோரியில் 71.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags:    

Similar News