மகளையும் காதலனையும் கொன்று கிணற்றில் வீசிய குரூர குடும்பம் | Gujarat Murder
- பிப்ரவரி 3 முதல் சோனு-நவீன் இருவரும் மாயமாகினர்.
- பெண்ணின் தாய் மற்றும் சகோதரனுக்கும் பங்குள்ளது,
குஜராத் மாநிலம் ராஜகோட மாவட்டத்தில் உள்ள கம்பாலா கிராமத்தை சேர்ந்தவர் சோனு ரபாரி (19). இவர் நவீன் ரபாரி (21) என்ற இளைஞரை காதலித்து வந்தார்.
நவீன் உடனான காதலுக்கு சோனுவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 3 முதல் சோனு-நவீன் இருவரும் மாயமாகினர். இந்நிலையில் பெண்ணின் குடும்பத்தினராலேயே அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவத்தன்று, சோனுவின் தந்தையும் அவரது மருமகனும் மோட்டார் சைக்கிளில் அவர்களை ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சோனு - நவீன் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சோனுவின் தாய் மற்றும் சகோதரனுக்கும் பங்குள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலையை மறைப்பதற்காக, இருவரது உடல்களையும் அருகில் இருந்த ஒரு கிணற்றில் வீசியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக தேடப்பட்டு வந்த நிலையில், போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தை உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் கிணற்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டன. போலீசார் சோனுவின் தந்தை, தம்பி மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.