குஜராத்தில் 2.05 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு - மாநில அரசு | Gujarat Malnutrition
- 6,805 குழந்தைகள் மிகவும் கடுமையான உடல் எடை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தில் 20,762 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் 20 மாவட்டங்களில் சுமார் 2.05 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்விக்கு பதிலளித்த மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனிஷா வக்கீல், ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த 2026 ஜனவரி மாத நிலவரப்படி, மாநிலத்தில் 1.69 லட்சம் குழந்தைகள் சராசரிக்கும் குறைவான உடல் எடை கொண்டவர்களாக உள்ளனர், 36,805 குழந்தைகள் மிகவும் கடுமையான உடல் எடை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாநிலத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 2.05 லட்சம் ஆக உள்ளது.
அதிகபட்சமாக மத்திய குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பஞ்ச்மஹா மாவட்டத்தில் 20,762 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.
இந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்க மாநில அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.