பீகாரிகள் கூலிவேலை செய்ய பிறந்தவர்கள் எனில் ஏன் இங்கு வாக்கு கேட்க வருகிறீர்கள்?: பிரசாந்த் கிஷோர்
- பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- இதையடுத்து, அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன சுராஜ் கட்சி தலைவரான பிரசாந்த் கிஷோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராகுல் காந்தி பீகாருக்கு வருகிறார், அது நல்ல விஷயம். அவர் இன்னும் வர வேண்டும்.
ஆனால் காங்கிரஸ் தலைவரும் தெலுங்கானா முதல் மந்திரியுமான ரேவந்த் ரெட்டி, கூலி வேலை செய்வது பீகாரிகளின் டி.என்.ஏ.வில் உள்ளது என்று கேமராவில் கூறியதாக நான் பல மாதங்களாக அவரிடம் சொல்லி வருகிறேன்.
ராகுல் காந்தி முதலில் தனது அன்புக்குரிய முதல் மந்திரியின் வார்த்தைகளுடன் உடன்படுகிறாரா இல்லையா என்பதைச் சொல்ல வேண்டும்.
பீகாரிகள் கூலி வேலை செய்யப் பிறந்தவர்கள் என்றால் அவர்கள் ஏன் பீகாருக்கு வாக்கு கேட்க வருகிறார்கள்?
தெலுங்கானாவில் அரசியல் செய்துவிட்டு அங்கிருந்து வாக்கு கேட்கிறார்கள்.
நிதிஷ்குமார் உடல் ரீதியாக, மன ரீதியாக ஆரோக்கியமாக இல்லை. நான் ஏதாவது தவறு சொன்னால் அவர் எனக்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும், எல்லாம் வெளியே வரும் என தெரிவித்தார்.