இந்தியா
உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்: உத்தவ் தாக்கரே
- மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
- கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.
சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே நாஷிக்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
* மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
* கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.
* நான் பாஜக-வில் இருந்து பிரிந்து விட்டேன். இருந்தாலும் உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்.
* பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை நான் ஏற்கவில்லை.
* சிவசேனா இல்லாமல், பாஜக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிலையை எட்டியிருக்காது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.