இந்தியா

ஐதராபாத்தில் இன்று உலக அழகி இறுதி போட்டி: இந்திய இளம்பெண் பட்டம் வெல்வாரா?

Published On 2025-05-31 10:04 IST   |   Update On 2025-05-31 10:04:00 IST
  • 1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.
  • இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடக்கிறது.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது.

108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்ல போட்டியிட்டனர். மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா உட்பட 40 பேர் காலிறுதிக்கு நுழைந்துள்ளனர்.

அமெரிக்கா-கரீபியன் ஆப்பிரிக்கா ஐரோப்பா மற்றும் ஆசியா ஓசியானியா கண்டங்களிலிருந்து தலா ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நான்கில் கடைசி கேள்வியின் மூலம் உலக அழகி அறிவிக்கப்படுவார்.

1951-ம் ஆண்டு உலக அழகி போட்டி தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துகிறது.

இதற்கு முன்பு பெங்களூரு (1996) மற்றும் மும்பை (2024) ஆகிய இடங்களில் நடைபெற்றது. நம் நாட்டுப் பெண்கள் 6 முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர்.

ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்றுள்ளனர்.

இந்த முறை இந்திய அழகி நந்தினி குப்தா பட்டம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இறுதிப்போட்டி நடைபெறும் ஹைடெக்ஸ் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு உலக அழகி மனிதாபிமான விருது வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News