இந்தியா

ஐதராபாத்தில் ஓட்டல் மேலாளர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை

Published On 2023-08-24 14:37 IST   |   Update On 2023-08-24 14:37:00 IST
  • தேவேந்தர் கயான் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
  • துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மதின குடாவில் தனியார் ஓட்டல் உள்ளது. இதில் தேவேந்தர் கயான் என்பவர் பொது மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு மியா போரில் உள்ள பஜாரில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தேவேந்தர் கயானை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க தேவேந்திர் கயான் பஜாரில் அங்கும் இங்குமாக ஓடினார்.

இருப்பினும் மர்ம நபர்கள் விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியில் சுட்டனர்.

இதில் தேவேந்தர் கயான் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

இதனால் பஜார் முழுவதும் பதற்றமாக காணப்பட்டது. அங்கிருந்த சிலர் தேவேந்தர் கயானை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மடப்பூர் டிசிபி சந்தீப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் அப்பகுதியில் இருந்த 6 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News