இந்தியா

வயிற்றில் எட்டி உதைத்த கணவன்.. கொடுமைப்படுத்திய மாமியார் - கர்ப்பிணி பெண் தற்கொலை

Published On 2025-07-31 19:16 IST   |   Update On 2025-07-31 19:16:00 IST
  • கொலை செய்துவிடுவதாக மிரட்டி கணவர் தனது தனது கையை உடைத்தார்
  • அவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதாக தெரிவித்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் கணவர் - மாமியார் சித்ரவதை காரணமாக கர்ப்பிணிப் பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

ஃபசீலா (23) என்ற அந்தப் பெண் தனது கணவர் நௌஃபல் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 29 அன்று கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.

கடைசியாக தனது தாய்க்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய செய்தியில், அவர் இந்த துயர முடிவை எடுத்ததற்கான காரணங்களை விவரித்துள்ளார்.

தாய்க்கு அனுப்பிய செய்தியில், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், தனது கணவர் தனது வயிற்றில் பலமுறை எட்டி உதைத்ததாகவும் ஃபசீலா கூறியுள்ளார்.

மேலும், கொலை செய்துவிடுவதாக மிரட்டி கணவர் தனது தனது கையை உடைத்தார் என்றும் மாமியாரும் அவரை தொடர்ந்து துன்புறுத்தியாக தெரிவித்துள்ளார்.  அவர்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுவதாகவும், எனவே தானே உயிரிழப்பதாகவும் தாய்க்கு அனுப்பிய செய்தியில் ஃபசீலா தெரிவித்துள்ளார்

ஃபசீலாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் நௌஃபல் மற்றும் அவரது தாய் ரம்லா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் பிற குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.  

Tags:    

Similar News