இந்தியா
விமான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவதில் புதிய விதிமுறை
- இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
- டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான 'ரீபண்டு' பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இந்த விதிமுறையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.