இந்தியா

சாலையில் சென்ற சிறுமியை கடத்தி, நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ஹாக்கி பயிற்சியாளர்

Published On 2025-07-22 03:45 IST   |   Update On 2025-07-22 03:46:00 IST
  • கடத்திச் சென்று, ஒரு விடுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமி சர்தக் பணியாற்றும் ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தவர் ஆவார்.

ஒடிசாவில் சாலையில் சென்றுகொண்டுருந்த 15 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்வபம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 3 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், சிறுமியின் பெற்றோர் தற்போது காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

அன்றைய தினம், சர்தக் என்ற ஹாக்கி பயிற்சியாளர், சந்தீப் மற்றும் சாகர் ஆகிய தனது நண்பர்களுடன் சேர்ந்து, சிறுமியை சாலையிலிருந்து கடத்திச் சென்று, ஒரு விடுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இந்தச் சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த சிறுமி சர்தக் பணியாற்றும் ஹாக்கி மைதானத்தில் பயிற்சி பெற்று வந்தவர் ஆவார்.

இந்நிலையில் புகாரை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அண்மையில் ஒடிசாவில் சாலையில் சென்றுகொண்டிருந்த சிறுமி தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவமும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News