இந்தியா

உக்ரைன்- ரஷியா போரில் ஈடுபட்ட அரியானா வீரர் உயிரிழப்பு

Published On 2024-07-29 17:02 IST   |   Update On 2024-07-29 17:05:00 IST
  • ரவி மவுன் இறந்ததாக மாஸ்கோவில் உள்ள இ ந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை.

அரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மவுன். இவர்க கடந்த ஜனவரி 13ம் தேதி போக்குவரத்து வேலைக்காக ரஷியா சென்றார். அவர், பின்னர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

22 வயதான இவர், உக்ரைனியப் படைகளுக்கு எதிராக போரிட ரஷிய ராணுவத்தால் முன் நிலைக்கு அனுப்பட்டார்.

இந்நிலையில், உக்ரைன்- ரஷிய ராணுவப் போரில் ஈடுபட்டபோது ரவி மவுன் இறந்ததாக மாஸ்கோவில் உள்ள இ ந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரவி மவுனின் இருப்பிடம் குறித்து, அவரது சகோதரர் அஜய் மவுன் கடந்த ஜூலை 21ம் தேதி அன்று தூதரகரத்திற்கு கடிதம் எழுதினார். அப்போது, அவர் இறந்துவிட்டதாக தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அஜய் மவுன் கூறினார்.

உடலை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையை அனுப்புமாறு தூதரகம் கேட்டுக் கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அஜய் மவுன் தனது சகோதரரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவரது உடலைக் கொண்டு வர போதுமான பணம் எங்களிடம் இல்லை. ஒரு ஏக்கர் நிலத்தை விற்று ரூ.11.50 லட்சம் செலவழித்து அவரை ரஷியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

ராணுவத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் விரைவில் வெளியேற்றுவதாக ரஷ்யா உறுதியளித்தது.

Tags:    

Similar News