பாகிஸ்தான் காவல் பயிற்சிப் பள்ளியில் துப்பாக்கி சண்டை - 7 போலீசார், 6 பயங்கரவாதிகள் பலி
- வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரியைப் பயிற்சிப் பள்ளியின் பிரதான வாயிலில் மோதச் செய்து குண்டுவெடிப்பை ஏற்படுத்தியது.
- ஐந்து மணி நேர சண்டைக்குப் பிறகு, ஆறு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவல் பயிற்சிப் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு, டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள ரட்டா குலாச்சி காவல் பயிற்சிப் பள்ளியில் நேற்று நள்ளிரவு ஒரு பயங்கரவாதிகள் குழு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு லாரியைப் பயிற்சிப் பள்ளியின் பிரதான வாயிலில் மோதச் செய்து குண்டுவெடிப்பை ஏற்படுத்தியது.
இதன்பின் பயங்கரவாதிகள் வளாகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஐந்து மணி நேர சண்டைக்குப் பிறகு, ஆறு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் ஏழு காவல் துறையினரும் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பயிற்சி மையத்தில் இருந்த சுமார் 200 பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.