இந்தியா

குஜராத்தில் ஆஸ்பத்திரி வளாகத்தில் தீ விபத்து- 13 குழந்தைகள் உள்பட 75 பேர் பத்திரமாக மீட்பு

Update: 2022-06-26 03:08 GMT
  • திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் புகை சூழ்ந்தது.
  • 13 பச்சிளங்குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 75 பேர் மீட்டு மொட்டை மாடிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பரிமல் கார்டன் பகுதியில் ஒரு 4 மாடி கட்டிடம் உள்ளது. இதன் 4-வது தளத்தில் ஒரு குழந்தைகள் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக 20 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தால் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் புகை சூழ்ந்தது.

இந்நிலையில் அங்கிருந்து 13 பச்சிளங்குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்பட 75 பேர் மீட்டு மொட்டை மாடிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள எலும்புமூட்டு சிகிச்சைப் பிரிவில் தீப்பற்றியதாகவும், அது முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News