ஆர்.பி.ஐ. துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம்
- ராஜேஷ்வர் ராவ் பதவிக்காலம் அடுத்த மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
- இவருக்கு அரசு இரண்டு முறை பதவி நீட்டிப்பு கொடுத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது துணை கவர்னராக இருக்கும் எம். ராஜேஷ்வர் ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 9ஆம் தேதி ஷிரிஷ் சந்திர முர்மு துணை கவர்னராக பதவி ஏற்பார்.
ஆர்பிஐ-யின் கண்காணிப்பு துறையை மேற்பார்வையிடம் நிர்வாக இயக்குனராக ஷிரிஷ் சந்திர முர்மு இருந்து வருகிறார்.
ஆர்.பி.ஐ.-யின் 1934 சட்டத்தின்பாடி, ரிசர்வ் வங்கி நான்கு துணை கவர்னர்களை கொண்டிருக்க வேண்டும். தற்போது ரபி சங்கர், சுவாமிநாதன், பூனம் குப்தா ஆகியோர் துணை ஆளுநர்களாக உள்ளனர்.
ரஜேஷ்வர் ராவ் கடந்த 2020 ஆம் ஆண்டு துணை கவர்னராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருடைய பதவிக்காலம் 3 வருடம் ஆகும். 2023ஆம் அண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. பின்னர், மேலும் ஒரு ஆண்டு நீடிக்கப்பட்டது. இதனால் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
தற்போது புதிய துணை கவர்னராக பதவி ஏற்கும் ஷிரிஷ் சந்திர முர்மு-வின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.