விளையாட்டு
null

உலக பாரா வில்வித்தையில் தங்கம்.. வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் தங்க மகள்

Published On 2025-09-27 16:00 IST   |   Update On 2025-09-27 16:01:00 IST
  • காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அம்பு எய்வார்.
  • போகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.

தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வரும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி (18 வயது) வரலாறு படைத்துள்ளார்.

 இன்று(சனிக்கிழமை) நடந்த பெண்களுக்கான காம்பவுண்டு ஒற்றையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த உலகின் நம்பர் 1 சாம்பியன் ஓஸ்நுர் குரே கிர்டி -ஐ 146-143 என்ற கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் தேவி தங்கம் வென்றார்.

 உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் கைகள் இன்றி தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை ஷீத்தல் தேவி படைத்துள்ளார்.  

முன்னதாக நேற்று, பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியா சார்பில் ஷீத்தல் தேவி, சரிதா ஜோடி, 'நம்பர்-1' இடம் பிடித்த பிரிட்டனின் போபே பைன், ஜெசிக்கா ஜோடியை 152-150 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

போகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை நோயால் கைகள் இன்றி பிறந்த ஷீத்தல் தேவி, காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அவர் அம்பு எய்வதில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

Tags:    

Similar News