இந்தியா

கெமிக்கல் தொழிற்சாலையில் வாயுக்கசிவு: உரிமையாளர் உள்பட 3 பேர் பலி

Published On 2025-04-01 14:39 IST   |   Update On 2025-04-01 14:39:00 IST
  • வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
  • இதையடுத்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானின் பீவார் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கரில் இருந்து நேற்று நச்சு வாயு கசிந்தது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலை உரிமையாளர் சுனில் சிங்கால் (47) நேற்று இரவும்,தயாராம் (52), நரேந்திர சோலங்கி ஆகியோர் இன்றும் இறந்தனர்.

பாடியா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக இயக்கப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நைட்ரிக் அமிலக் கசிவு காரணமாக நேற்று இரவு 53 பேர் நோய்வாய்ப்பட்டனர். வாயுவை சுவாசித்த பின் அருகிலுள்ள பலர் நோய்வாய்ப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சுவாசப் பிரச்சனை மற்றும் வாந்தி போன்ற புகார்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர் அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாயுக்கசிவைத் தொடர்ந்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவை அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News