இந்தியா

சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி: நாணயங்கள் சேர்த்து ஸ்கூட்டர் வாங்கி மகளுக்கு பரிசளித்த தந்தை

Published On 2025-10-25 00:33 IST   |   Update On 2025-10-25 00:33:00 IST
  • ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தரும்படி சம்பா பகத் கேட்டார்.
  • மகளின் கனவை நிறைவேற்ற அவர் தினமும் சில நாணயங்களை சேர்த்து வந்தார்.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத். விவசாயியான தனது தந்தையிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும்படி சம்பா பகத் கேட்டார்.

தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அவர், தினமும் சில நாணயங்கள் மற்றும் ரூபாயை ஒரு சேர்த்து வந்தார். சில மாதங்கள் கழிந்த நிலையில் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தது.

இந்நிலையில், நாணயங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு பஜ்ரங் ராம் தனது மகளுடன் சென்றார்.

ஷோரூம் மேலாளர் விவசாயி பஜ்ரங் ராம் கதையைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து, நாணயங்களை வேண்டாம் என சொல்லாமல் அவற்றை வாங்கி ஊழியர்களிடம் எண்ணும்படி கூறினார்.

நாணயங்களை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ.40 ஆயிரம் இருந்தது. மீதி பணத்திற்கு கடன் கொடுக்கும்படி பஜ்ரங் ராம் தெரிவித்தார்.

அதன்படி, அவரிடம் புதிய ஸ்கூட்டர் சாவி கொடுக்கப்பட்டது. அந்த சாவியை தனது மகளிடம் வழங்கி மகிழ்ந்தார். தந்தையும், மகளும் ஸ்கூட்டரை வாங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.

Tags:    

Similar News