இந்தியா

திருச்சியில் இருந்து குஜராத் சென்ற ரெயிலில் திடீர் தீ விபத்து..

Published On 2023-09-23 10:51 GMT   |   Update On 2023-09-23 10:51 GMT
  • ரெயிலில் இருந்த பயணிகள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.
  • புறப்பட்ட சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ பிடித்தது.

திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் வால்சத் ரெயில் நிலையத்தில் நின்று, அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ரெயிலின் ஜெனரேட்டர் பெட்டியில் தீ பிடித்தது.

ரெயில் பெட்டியில் இருந்து தீ வெளியேறுவதை பார்த்ததும், ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகெலா தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News