இந்தியா

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்- மாநில நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

Published On 2022-11-25 19:24 GMT   |   Update On 2022-11-25 19:24 GMT
  • மாநிலங்களின் கருத்துக்களை பரிசீலிப்பதாக மத்திய நிதியமைச்சர் தகவல்
  • கடன் உச்ச வரம்பை உயர்த்தியதற்காக மத்திய அரசுக்கு, மாநிலங்கள் நன்றி.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 2023-2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர். நிதித்துறையை கையாளும் முதலமைச்சர்களும், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரும் இதில் கலந்து கொண்டனர்.

மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டியவை குறித்த பல்வேறு ஆலோசனைகள் மாநிலங்கள் சார்பில் வழங்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக கடன் பெறுவதற்கான உச்ச வரம்பை உயர்த்தியதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News